கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் தெரிவித்துள்ளார்.
இணையத்தள சேவைகள் வழங்குவதில் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த களத்தில் யாகூவும் உள்ளது.
இந்நிலையில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில், தங்களால் சிறப்புற செயல்பட முடியவில்லை என்று யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் மற்றும் அதன் இயக்குனர்கள் யோமேஷ் ஜோஷி, ஆர்தர் கெர்ன் மற்றும் கேரி வில்சன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.