ஆப்லைனில் ஜிமெயில் உபயோகிப்பதில் மேலும் சில புதிய வசதிகள்

on Monday, January 16, 2012


வந்தேமாதரத்தில் முந்தைய பதிவில் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் ஜிமெயிலை உபயோகிப்பது எப்படி என்று பார்த்து இருந்தோம். இப்பொழுது அந்த ஆப்லைன் சேவையில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது ஜிமெயில் நிறுவனம். (ஜிமெயிலை ஆப்லைனில் உபயோகிப்பது எப்படி என இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.)


Download Mai from Past:
ஆப்லைன் உபயோகத்தில் இனி ஒரு மாதத்திற்கு முன் வந்த ஈமெயிலை கூட டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளலாம். மற்றும் இன்பாக்ஸில் எவ்வளவு நாளுக்கு முந்தைய மெயில் வர வேண்டும் என்பதை  இதில் கிளிக் செய்து நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Attachment download:
உங்கள் ஈமெயிலுக்கு வந்துள்ள attachment பைல்களை இனி ஆப்லைனிலேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Shortcuts:
உங்கள் ஜிமெயில் கணக்கில் ஷார்ட்கட் உபயோகத்தை ஆக்டிவேட் செய்து வைத்து இருந்தால் இனி ஆப்லைனிலும் Shortcut உபயோகிக்கலாம். ஜிமெயில் கணக்கில் shortcut வசதியை ஆக்டிவேட் செய்ய இந்த பதிவில் சென்று பாருங்கள்.

மற்றும் ஆப்லைன் வசதியில் இதற்க்கு முன்பு இருந்த சில பிழைகளையும் கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

Labels

Blogger Widgets